மார்ச் 04, 2021
தனிப்பட்ட, பாதுகாப்பான வழியில் குரல் மற்றும் காணொலி அழைப்புகளைப் பயனர்கள் இனி WhatsApp-இன் டெஸ்க்டாப் ப் செயலியில் இருந்தும் செய்து கொள்ளலாம் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த ஆண்டு முழுவதும், பயனர்கள் தங்களுக்கிடையே பேசிக்கொள்ள, பெரும்பாலும் நீண்டநேர உரையாடல்களுக்கு, WhatsApp-ஐப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருப்பதை அறிந்தோம். கடந்த புத்தாண்டுக்கு முந்தைய தினத்தன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 140 கோடி குரல் மற்றும் காணொலி அழைப்புகள் என்ற எண்ணிக்கையை எட்டி, ஏற்கெனவே இருந்த ஒரு நாளிலான அதிகபட்ச அழைப்புகளின் எண்ணிக்கைக்கான சாதனையை முறியடித்துள்ளோம். பல பயனர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பிரிந்து, வேலை நிமித்தமாகப் பல்லாயிரம் மைல் தூரத்தில் பணிபுரிந்து வந்தாலும், WhatsApp-இல் நடைபெறும் உரையாடல்கள் நேரடியாகப் பேசுவது போன்ற நெருக்கமான உணர்வைத் தர வேண்டும் என்றே விரும்புகிறோம்.
ஒரு பெரிய திரையில் உரையாடுவது சக ஊழியர்களுடன் பணியாற்றுவதை எளிதாக்கிடும், உங்கள் குடும்பத்தினரைத் தெளிவாகப் பார்க்கலாம், சுதந்திரமாக உலாவிக் கொண்டே பேசலாம். டெஸ்க்டாப் அழைப்புகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கு, போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் ஆகிய இரண்டு பயன்முறைகளிலும் இந்த அம்சம் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்துள்ளோம். உங்கள் கணினித் திரையில் தோன்றும் அளவைத் தானாகவே மாற்றிக் கொள்ளும் திறனில் அமைக்கப்பட்டிருக்கும். உலாவித் தாவலில் மறைந்திடாமல் எப்போதும் தெரியும்படி எல்லா சாளரங்களுக்கும் மேலே உங்கள் காணொலி அரட்டைகள் இருக்கும்.
WhatsApp-இல் செய்யப்படும் குரல் மற்றும் காணொலி அழைப்புகள் யாவும் முழு மறையாக்கப்பட்டவை, எனவே மொபைல் அழைப்பாக இருந்தாலும் சரி, அல்லது காணொலி அழைப்பாக இருந்தாலும் சரி, WhatsApp-ஆல் அவற்றைக் கேட்கவோ பார்க்கவோ முடியாது. WhatsApp டெஸ்க்டாப் செயலியில் ஒருவருக்கொருவர் அழைக்கும் வசதியைத் தொடங்குகிறோம். உங்களுக்கு நம்பகமான, உயர்தர அனுபவத்தை வழங்குவோம் என்பதை எங்களால் உறுதியளிக்க முடியும். எதிர்காலத்தில் குழு அளவிலான குரல் மற்றும் காணொலி அழைப்புகளைச் சேர்த்து இந்த அம்சத்தை விரிவுபடுத்துவோம்.
பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனிப்பட்ட, பாதுகாப்பான வழியில் டெஸ்க்டாப் மூலமாக அழைப்பதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம். Windows PC மற்றும் Mac இயங்குதளங்களில் டெஸ்க்டாப் செயலியை எவ்வாறு பதிவிறக்குவது என்பது உட்பட மேலும் தகவல்களை, இந்தக் கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.